Dec 5, 2025
Thisaigal NewsYouTube
செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து பாட தடை விதிப்பதா? சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கைநாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உறுதி
தற்போதைய செய்திகள்

செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து பாட தடை விதிப்பதா? சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கைநாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் உறுதி

Share:

பினாங்கு, Kepala Batas ஸில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்துப் பாடுவதற்கு தடை விதித்த அதிகாரி மீது கல்வி அமைச்சு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று அதன் அமைச்சர் ஃபத்லினா சிடெக் இன்று உறுதி அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் கவனக்குறைவு மற்றும் அலட்சிப் போக்கினால் நிகழ்ந்த இச்சம்பவத்திற்காக தாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், கல்வி அமைச்சர் என்ற முறையில் இதற்கு தார்மீக பொறுப்பேற்பதாகவும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.

தமிழ்மொழிக்காக எடுக்கப்பட்ட ஒரு விழாவில் தமிழ் வாழ்த்து பாட அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் உண்மையிலே நடந்து இருக்கக்கூடாது என்று இன்று நாடாளுமன்ற மக்களவைக்கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் .

தமிழ் வாழ்த்துப் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்ட இச்சம்பவம் தொடர்பில் இந்திய சமுதாயத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் தாம் உணர்வதாக குறிப்பிட்ட ஃபத்லினா சிடெக், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

Related News

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

கெடாவில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்