செர்டாங்,ஜன.23
பூச்சோங் அருகில் காலியாக கிடந்த ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் மூன்று வங்காளதேசப் பிரஜைகளை போலீசார் கைது செய்துள்ளனர். 23 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூன்று வங்காளதேசிகளும் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் யூசோஃப் தெரிவித்தார்.
திரெங்கானுவை சேர்ந்த அந்த ஆடம்பர அடுக்குமாடி வீட்டின் உரிமையாளர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த மூன்று பேரையும் வளைத்துப் பிடித்ததாக ஏசிபி வான் கமாருல் குறிப்பட்டார்.








