2024 க்கான மஇகா தேர்தலில் தேசியத் தலைவர், துணைத் தலைவர் ஆகியப் பதவிகளுக்குப் போட்டி இல்லை என்று பேரா மாநில ம.இ.கா.வின் 77வது பேராளர் மாநாட்டில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பகாங் ம.இ.கா.வைத் தொடர்ந்து பேரா மாநிலமும் இந்த முடிவை எடுத்துள்ளதை தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ மு சரபணன் உறுதிப்படுத்தினார்.
பேரா மாநில ம.இ.கா.வின் தலைவர் டத்தோ வீ இளங்கோவின் முழு ஆதரவுக்குத் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் டத்தோ ஶ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.
இதுவரை தலைவருக்கானப் போட்டி இருப்பதாகத் தெரியவில்லை. , துணைத் தலைவர், உதவித் தலைவர் அனைவரும் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு ஆதரவளிக்கிறார்கள், ஆகையால் அவர் தொடர்ந்து மஇகா தலைவராக நீடிப்பார். மேலும் அவரது முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் கட்சி உறுப்பினர்கள் பக்கபலமாக இருப்பதோடு கட்சியின் இரட்டைக் கட்டடத்தை கூடிய விரைவில் கட்டி முடிப்பதில் முழு வீச்சில் இறங்கி இருப்பதாக சரவணன் தெரிவித்தார்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டுக்கான தேசியத் தலைவர், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டி இல்லை எனும் தீர்மானத்தை பகாங் மாநில ம.இ.கா. தலைவர் வி. ஆறுமுகம் கொண்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








