மலேசியா மதச்சார்பற்ற நாடாக மாறுவதற்கு வழியே இல்லை என்று அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராஃப் வஜ்டி டுசுக்கி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய சமயத்திலிருந்து மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை பிரிப்பதற்கு
ஒற்றுமை அரசாங்கம், இந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக மாற்றும் நோக்கில் செயல்படுகிறது என்று பாஸ் கட்சித் தலைவர்கள் கூறுவது வெறும் புரளி என்று அஷ்ராஃப் வஜ்டி கூறினார்.
தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டதாகும்.
பாஸ் கட்சித் தலைவர்கள் குற்றஞ்சாட்டுவதைப் போல மலேசியாவை மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது என்றால் அதனை அம்னோ முழு வீச்சில் எதிர்க்கும் என்று அவர் குறிப்பிட்ட்டார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாக நிலைநிறுத்தப்படும். அப்படியே மலேசியாவை ஒரு மதச்சார்பற்ற நாடாக மாற்ற வேண்டுமானால் அச்சட்டத்தின்படி மூன்றாவது விதிமுறையை திருத்த வேண்டும். அவ்வாறு திருத்துவது என்பது சாத்தியமே இல்லை என்று அஷ்ராஃப் வஜ்டி விளக்கினார்.








