உலு சிலாங்கூர், நவம்பர்.27-
கோலகுபு பாருவில் உள்ள எம்ஆர்எஸ்எம் பள்ளியின் தங்கும் விடுதியில் உறங்கிக் கொண்டு இருந்த மூன்று மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்ளூரைச் சேர்ந்த 48 வயதுடைய அந்த நபர், கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் இப்ராஹிம் ஹுசேன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 16 வயதுடைய மூன்று மாணவிகள் இச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், இதற்கு முன்பு எந்தவொரு குற்றப்பதிவையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் விளக்கினார்.








