Jul 1, 2026
Thisaigal NewsYouTube
பத்துகேவ்ஸ் சிறார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு
தற்போதைய செய்திகள்

பத்துகேவ்ஸ் சிறார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

Share:

கூச்சிங், ஏப்ரல்.11-

பத்துகேவ்ஸ், தாமான் செலாயாங் பெர்மாத்தாவில் உள்ள சிறார் பராமரிப்பு இல்லத்தில் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கின் சட்ட அம்சங்கள் தீர்ப்பு மற்றும் அதன் பின்னணிக் காரணங்களை மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இல்லத்தின் பராமரிப்பாளரான 25 ரத்னவேலு மற்றும் சிறார் இல்லத்தின் உரிமையாளரான 31 வயது எஸ். வேலன் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ நான்சி சுக்ரி, சட்ட ரீதியான காரணங்களை முழுமையாகப் புரிந்து கொண்ட பின்னரே அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.

எட்டு முதல் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு எதிராக 15-க்கும் மேற்பட்ட பாலியல் அத்துமீறல்களைச் செய்ததாக ரத்னவேலு மற்றும் வேலன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் ரத்னவேலு குற்றத்தை ஒப்புக் கொண்டார். வேலன், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் மிகவும் தீவிரமானவை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு அதிருப்தி அடைந்தால் மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுண்டு என்றும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

Related News

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

பகடி வதை செய்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 4 மாணவர்கள் நிரந்தர நீக்கம் - மாரா நிர்வாகம் அதிரடி

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

மலாய்க்காரர்கள் மலாய் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டும் - மகாதீர் வலியுறுத்து

  10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் புதிய மலேசியக் கடப்பிதழ் - இன்று முதல் அமலுக்கு வருகின்றது

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

பேராவில் காணாமல் போன 6 வயது சிறுவன் செம்பனைத் தோட்டத்தில் சடலமாக மீட்பு

அம்னோவும், பாஸும்  ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

அம்னோவும், பாஸும் ஒன்றுதான் என்றால், வாக்காளர்களுக்கு பி.ஹெச்-தான் சிறந்த தேர்வு!" – லியூ சின் தோங்

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி

ஜோகூர் தேர்தல் முடிவுகள் கூட்டரசு அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: டத்தோஸ்ரீ முகமட் ஹசான் உறுதி