லஞ்சம் ஊழல் தொடர்பில், முன்னாள் நீதிபதியும், ஒரு போலீஸ்காரரும் இன்று ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.|
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில், ஈப்போ, தாமான் தாசேக் முதியாரா, ஜாலான் கோலக் கங்சாரில் உள்ள ஓர் உணவகத்தில், சிரியா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான 43 வயதுடைய புர்ஹனுடின் இஸ்மி அடாமும், லான்ஸ் கார்போரல் அந்தஸ்தைக் கொண்ட 34 வயதுடைய முகமட் ஹம்ரி அயோப்பும், கல்வாட் வழக்கு தொடர்பில் 4 ஆயிரம் வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக அவர்களுக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


