Oct 13, 2026
Thisaigal NewsYouTube

வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வேலை இழப்போருக்கு இஐஎஸ் திட்டத்தில் 6 மாதங்கள் வரை நிதியுதவி: பொருளாதார அமைச்சு தகவல்

மலேசியாவில் அடுத்த ஆண்டு 2,000 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியம் அமல்படுத்தப்படுவதால், நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், பாதிக்கப்படும் தகுதியுள்ள தொழிலாளர்கள், வேலைவாய்ப்புக் காப்பீட்டுத் திட்டமான இஐஎஸ்-இன் கீழ் ஆறு மாதங்கள் வரை நிதியுதவி பெறலாம் எனப் பொருளாதார அமைச்சர் அக்மால் நஸ்ருல்லா முஹமட் நாசீர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதில் வேலை தேடுவதற்கான உதவித்தொகையும் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில் ஆண்டு, விற்பனை வருவாய், 50 மில்லியன் ரிங்கிட்டிற்கும் குறைவாக உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஊதிய உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய குறைந்தபட்ச ஊதிய விதிமுறைகளைப் பின்பற்றாத முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் புகார் அளிக்கலாம் என்றும், பட்டதாரிகளைப் பணியமர்த்துவதில் ஏற்படக்கூடிய சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, பணிப் பொறுப்புகள், கல்வித் தகுதிகள் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், ஊதிய முறையை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர்களின் திறன்கள், தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழிலாளர் ஊதியத்தின் பங்கை 33.9 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக உயர்த்த அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனிடையே, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அடுத்த ஆண்டு 700 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 30 ஆயிரம் ஜுவாலான் ரஹ்மா மடானி விற்பனைத் திட்டங்களும், 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 5,000 ஜுவாலான் அக்ரோ மடானி திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →