Oct 13, 2026
Thisaigal NewsYouTube

தஞ்சோங் மாஸ் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த ஆசிரியை விசாரணை கோரினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தஞ்சோங் மாஸ் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த ஆசிரியை விசாரணை கோரினார்

கிளந்தான் மாநிலம், கோத்தா பாரு, எஸ்எம்கே தஞ்சோங் மாஸ் பள்ளியில் கடந்த ஏப்ரல் மாதம் கார் மோதி மாணவி உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவி காயமடைந்த சம்பவம் தொடர்பாக, 57 வயது ஆசிரியை சகினா இஸ்மாயில் மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, அவர் அவற்றை மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி பிற்பகல் 1.40 மணியளவில் பள்ளியின் தொழுகைக் கூடம் அருகே இச்சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றச்சாட்டின்படி, கவனக்குறைவாகச் செயல்பட்டு ஒன்றாம் படிவ மாணவியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டில், குற்றவியல் சட்டத்தின் 304A பிரிவின் கீழ் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது குற்றச்சாட்டின் படி, ஹோண்டா எச்ஆர்-வி காரை ஓட்டி மற்றொரு மாணவியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்குக் குற்றவியல் சட்டம் 336ஆவது பிரிவின் கீழ் அதிகபட்சம் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது 500 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →