1 மலேசியா டெவலப்மென் பெர்ஹாட் எனப்படும் 1எம்டிபி நிறுவனத்தின் ஆகக்கடைசியான கணக்கறிக்கை தணிக்கையின் விவரங்களை அழித்தல், திருத்தல் என பல மாற்றங்களை செய்து, உண்மையான கணக்கு விவரங்களை போல் மூடி மறைத்ததாக கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்த முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும், அந்த நிதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் விடுதலை செய்யப்பட்டதைத் அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.இவ்விருவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அவர்களின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த காலகட்டத்திற்குள் அப்பீல் மனுவை தாக்கல் செய்ய பிராசியூஷன் தரப்பு தவறிவிட்டதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.மேல்முறையீட்டை பதிவு செய்த ஜுலை 6 ஆம் தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அந்த காலகட்டத்திற்குள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யதற்கு பிராசிகியூஷன் தவறிவிட்டதாக நீதிபதி குறிப்பிட்டார்.