கோலாலம்பூர், பிப்ரவரி.20-
ஆயுதச் சட்டம் 1960-ன் கீழ் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யத் தவறிய குற்றச்சாட்டிலிருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், அதே குற்றத்திற்காக இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயதான அஸ்லான் சுடின் என்ற அந்த இன்ஸ்பெக்டர், மாஜிஸ்திரேட் Noorelynna Hanim Abd Halim முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி மாலை 6.50 மணி முதல் 7.00 மணிக்குள், கோலாலம்பூர் புக்கிட் ஜாலீல் போலீஸ் நிலையத்தில், ஆயுதச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேர் கைது செய்யப்பட வேண்டிய 36 வயதுடைய நபரை, ஓர் அரசு ஊழியர் என்ற முறையில் வேண்டுமென்றே அவரைக் கைது செய்யத் தவறியதாக அஸ்லான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.








