Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தொழில் அதிபர் டத்தோ மாலிக்கிற்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை தொடர்கிறது
தற்போதைய செய்திகள்

தொழில் அதிபர் டத்தோ மாலிக்கிற்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை தொடர்கிறது

Share:

மலேசிய தொழில் அதிபரும், மாலிக் ஸ்ட்ரீம் கோர்போரேஷன் எஸ்டிஎன் பிஎச்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், இந்தியாவிலிருந்து திரைப்பட நடிகர், நடிகைகளை கோலாலம்பூருக்கு கொண்டு வந்து கலைநிகழ்ச்சி படைப்பதில் பிரபலமாக விளங்கிவருபருமான டத்தோ மாலிக் என்ற அப்துல் மாலிக் டஸ்தீகர்க்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மின் புலன் விசாரணை, தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த ஆணையத்தின் தலைவர் தான் ஶ்ரீ அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசாங்க ஏஜென்சிகளை சேர்ந்த அமலாக்கத் தரப்பினைரை கொண்ட குழுவினருடன் இணைந்து டத்தோ மாலிக் க்கிற்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எஸ்பிஆர்எம் முழு வீச்சில் விசாரணை நடத்தி வருவதாக அசாம் பாக்கி விளக்கினார்.
உள்நாட்டு வருமான வரி வாரியம் உட்பட மேலும் பல அரசாங்க ஏஜென்சிகள், டத்தோ மாலிக் தொடர்புடைய குற்றச்சாட்டை விசாரணை செய்து வருவதாக அசாம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

தமிழ்நாடு ராமநாதப்புரத்தை பூர்வீகமாக கொண்ட டத்தோ மாலிக், எஸ்பிஆர்எம்மினால் 2001 ஆம் ஆண்டு அம்லா (AMLA ) சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

பணமோசடி , பயங்கரவாத எதிர்ப்பு நிதியுதவி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் வாயிலாக பண குவிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஜுலை மாதம் டத்தோ மாலிக், எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மூன்று நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட டத்தோ மாலிக், விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் டத்தோ மாலிக்கிற்கு எதிராக எஸ்பிஆர்எம் நடத்திய விசாரணை என்ன ஆனது என்று எழுப்பட்டுள்ள கேள்விக்கு அஸாம் பாக்கி மேற்கண்டவாறு பதில்அளித்துள்ளார்.

Related News

தொழில் அதிபர் டத்தோ மாலிக்கிற்கு எதிரான எஸ்பிஆர்எம் விசார... | Thisaigal News