கெடா, லூனாஸ் வட்டாரத்தில் பல இடங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தி வரும் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று லூனாஸ் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் சி. அரிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
லூனாஸ், தாமான் கிஜாங்கில் இன்று தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் அதிகாரியான அரிச்சந்திரன், அப்பகுதி மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்னையை கேட்டறிந்த போது, வெள்ளப்பிரச்னை, ஒரு தொடர்கதையாக இருந்து வருவதாக புகார் அளித்துள்ளனர என்றார்.
வெள்ளப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால் நிச்சயம் கெடா மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். அந்த வகையில் இம்மாதம் 12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் லூனாஸ் சட்டமன்ற உறுப்பினராக தாம் தேர்வு செய்யப்பட்டால் தாமான் கிஜாங் பகுதியில் மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ளப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அரிச்சந்திரன் உறுதி அளித்தார்.
வடிக்கால்களை சீரமைத்தல், கால்வாய்களில் தூர்வாறுதல் உள்ளிட்டு பல பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் லூனாஸ் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக தாம் தேர்வு செய்யப்பட்டால் இப்பிரச்னைகளை முன்வைத்து, மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்கப் போவதாக முன்னாள் தேர்தல் அதிகாரியான அரிச்சந்திரன் குறிப்பிட்டார்.

Related News

300 மில்லியன் ரிங்கிட் முதலீட்டு மோசடி: 'டான் ஸ்ரீ' ஒருவர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது

மொழிப் பிரச்சினைகள் குறித்த வாக்குவாதங்களை நிறுத்துங்கள்: பிரதமர் அன்வார் வேண்டுகோள்

பங்சாரில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்: ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம்

போலீஸ்காரர் உயிரிழந்த விபத்து: 80 வயது மூதாட்டி கைது

மலேசியாவின் AI, 5G மற்றும் டிஜிட்டல் மாற்றத் திட்டங்களை முன்னெடுப்பதில் பீடுநடை போடுகிறார் கோபிந்த் சிங் டியோ


