கோல திரங்கானு, நவம்பர்.28-
கோல திரெங்கானு நகரில் உள்ள பேரக்காடி மையம் ஒன்றில் பெண்கள் கழிப்றையில் கைப்பேசியில் வீடியோ படம் எடுத்தற்காகத் தேடப்பட்டு வந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர்.
பெண் ஒருவர் விடுத்த கூச்சலினால் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற 24 வயதுடைய அந்த நபர், கடந்த ஒரு வார காலமாகத் தேடப்பட்டு வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார்.
செத்தியு, கம்போங் புக்கிட் கெசில், ஜாலான் மெர்பாவில் உள்ள ஒரு முடித் திருத்தும் நிலையத்தில் அவர் பிடிப்பட்டதாக ஏசிபி அஸ்லி விளக்கினார்.








