Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மறு சுழற்சி தொழிற்சாலை தீ விபத்து
தற்போதைய செய்திகள்

மறு சுழற்சி தொழிற்சாலை தீ விபத்து

Share:

கூலிம், லுனாஸ், தாமான் இன்டாஸ்திரியில் உள்ள மறு சுழற்சி தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில், அத்தொழிற்சாலை 90 விழுக்காடு வரை எரிந்து நாசம் அடைந்ததாக கெடா மாநில தீயணைப்பு, மீட்பு துறையின் தலைமை அதிகாரி அவாங் ஹிட்ஸீல் அவாங் பூஜாங் தெரிவித்தார் .

நேற்றிரவு 11.45 மணி அளவில் கிடைத்த அவரச அழைப்பைத் தொடர்ந்து, அவ்விடத்திற்கு விரைந்த 18 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுப்பட்டனர். மேலும், பினாங்கு மாநிலத்திலிருந்து 17 தன்னார்வ தீயணைப்பு குழுக்களும் இதில் ஈடுப்பட்டதாக அவாங் ஹிட்ஸீல் குறிப்பிட்டார்.

மேலும், அத்தொழிற்சாலை அருகில் இருந்த மற்றொரு தொழிற்சாலையும் இத்தீயினால் பாதிக்கப்பட்டதாகவும், தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News