May 7, 2026
Thisaigal NewsYouTube
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு
தற்போதைய செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Share:

குவாந்தான், பிப்ரவரி.18-

குவாந்தான், தாமான் செராதிங் டாமாய் பகுதியில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் உடல்களும், இன்று மதியம் 2.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை முடிந்து இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தெங்கு அம்புவான் அஃப்ஸான் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவத் துறையில் n மேற்கொண்ட ஆய்வின்படி, முதல் உடல் மதியம் 2.50 மணியளவில் வெளியே கொண்டு வரப்பட்டது. பின்னர், நான்கு வேன்கள் மூலம் ஐவரின் உடல்களும் போலீஸ் துறை வாகனங்களின் பாதுகாப்புடன் மதியம் 3.10 மணியளவில் மருத்துவமனை வளாகத்திலிருந்து கொண்டுச் செல்லப்பட்டன.

ஐவரின் உடல்கள் செராதிங் பள்ளிவாசலுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு தொழுகை நடத்தப்பட்ட பிறகு, செராதிங் முஸ்லீம் மையத்துக் கொல்லையில் அடக்கம் செய்யப்பட்டன.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தனது மனைவி, தாய் மற்றும் இரண்டு குழந்தைகளைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி விட்டு, பின்னர் தானும் காயப்படுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

Related News

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்