Aug 19, 2026
Thisaigal NewsYouTube
50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
தற்போதைய செய்திகள்

50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு

Share:

50 லட்சம் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புடைய பல்வேறு வகையான போதைப்பொருட்களை கோலாலம்பூர் போலீசார் அழித்துள்ளனர்.

மொத்தம் 5,022 போதைப்பொருள் வழக்கு ஆதாரப் பொருட்கள் அழிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சூஸ் தெரிவித்தார்.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் மெத்தாம்பெட்டமைன், , கொக்கோய்ன், ,கெட்டமைன், கெத்தும் நீர் உள்ளிட்டவை அடங்கும். இவற்றின் மொத்த எடை 544.28 கிலோகிராம் மற்றும் 963.34 லிட்டர் திரவம் என அவர் கூறினார்.

கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற போதைப்பொருள் வழக்கு ஆதாரப் பொருட்கள் அழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதைப்பொருட்கள், நவீன 'scheduled waste to energy' incinerator தொழில்நுட்பம் மூலம் அழிக்கப்படுகின்றன. இதற்காக குவாலிட்டி அலாம் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் அழிப்பு நடவடிக்கை நெகிரி செம்பிலானின் புக்கிட் பெலாண்டுக் கழிவுப்பொருள் அழிக்கும் மையத்தில் மேற்கொள்ளப்படுகிறது.

போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான போரில் போலீசார் பிடியை இறுக்கி வரும் நிலையில், 50 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் தீயில் கருகி அழிக்கப்பட்டுள்ளன.

Related News