கிள்ளான், டிசம்பர்.23-
மாதிரி துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள் மற்றும் பிட்கோயின் இயந்திரங்கள் என சுமார் 16 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சாட்சியப் பொருட்களைப் வட கிள்ளான் மாவட்ட போலீஸ் துறை இன்று அழித்தது.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் 797 விசாரணை அறிக்கைகளுடன் தொடர்புடைய 34 ஆயிரத்து 120 சாட்சியப் பொருட்களை அழிப்பதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக வட கிள்ளான் மாவட்ட துணை போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ரஹிமி ஸைனோல் தெரிவித்தார்.
சாட்சியப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் அழிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








