சரவாக் மாநில முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓப்பேங், தாம் பதவியில் இருக்கும் காலம் விரைவில் முடிவுக்கு வரலாம் என சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
76 வயதான அபாங் ஜோஹாரி, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சரவாக் முதல்வர் ஆகவும் பார்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சத்து கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
மேலும், கட்சியில் அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்கி வருவதாகவும், சுமூகமான தலைமை மாற்றத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிரியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிபிபி (PBB) சிறப்பு மாநாட்டில் உரையாற்றிய அபாங் ஜோஹாரி, “ஒருவேளை இது எனது கடைசி ஆண்டாக இருக்கலாம். உங்கள் மனம் இளமையாக இருந்தாலும், இயற்கையை எதிர்த்துப் போராட முடியாது,” என்று தெரிவித்துள்ளார்.








