ஷா ஆலாம், ஆகஸ்ட்.22-
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நடமாடும் நீதிமன்றம் மற்றும் ஒரு வேன் இருக்க வேண்டும் என்று சட்டத் சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் பரிந்துரை செய்துள்ளார்.
சிறார் சாட்சிகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு வருவதைக் காட்டிலும் நடமாடும் நீதிமன்றம் மூலம் அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று வாக்குமூலம் பதிவு செய்வதற்கு இந்த நடவடிக்கை துணை புரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் வரும் அக்டோர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.








