நாட்டில் நிலவி வரும் புகைமூட்டம் காரணமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் மெர்தேக்கா சதுக்கம்-வில் நடைபெறவிருந்த பிரதமரின் தேசிய தின உரை, புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேசிய தின அணிவகுப்பு நடைபெறுமா? என்பது தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில், சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் துறை, மலேசிய வானிலை ஆய்வுத் துறை ஆகியவை ஆலோசனை நடத்தி முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா வெளியிட்டுள்ள தகவலின் படி, நேற்று ஆகஸ்ட் 27 முதல் வரும் ஆகஸ்ட் 31 -ஆம் தேதி வரை பல பகுதிகளில் புகைமூட்டம் நீடிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சரவாக் மாநிலத்தின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்றதாகவும், சில இடங்களில் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டும் அபாயம் உள்ளதாகவும் மெட் மலேசியா தெரிவித்துள்ளது.








