Aug 28, 2026
Thisaigal NewsYouTube
இதய நோயால் 11 வயது மாணவி உயிரிழப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக புகார்
தற்போதைய செய்திகள்

இதய நோயால் 11 வயது மாணவி உயிரிழப்பு: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாக புகார்

Share:

கெடா மாநிலம் அலோர் ஸ்டாரில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமி நுர் கைரா அலீஷா அகமத் இல்வான்-வை ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க கட்டாயப்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கெடா மாநிலக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

மருத்துவக் கடிதம் மூலம் சிறுமியின் உடல்நிலை உறுதி செய்யப்பட்டிருந்த போதிலும், கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவரைக் கட்டாயப்படுத்தப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஓட்டத்துக்குப் பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, சுவாச உதவி சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், அச்சிறுமி கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கல்வி அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

Related News