Sep 7, 2026
Thisaigal NewsYouTube
டெங்கிலிருந்து புஸ்பென் மையத்திலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம் - தீவிரத் தேடுதல் வேட்டை
தற்போதைய செய்திகள்

டெங்கிலிருந்து புஸ்பென் மையத்திலிருந்து 2 கைதிகள் தப்பியோட்டம் - தீவிரத் தேடுதல் வேட்டை

Share:

சிலாங்கூர் மாநிலம் டேங்கில் பகுதியில் உள்ள போதைப்பொருள் அடிமைத்தனம் மீட்பு மையமான புஸ்பென்-இல் இருந்து, நேற்று காலை இரண்டு கைதிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவரும் காலை 8.40 மணியளவில், அந்த மையத்திலிருந்து தப்பிச் சென்றதாக சேபாங் மாவட்ட துணை போலீஸ் தலைவர் மீயோர் முகமது நூர் அசுவான் அலியாஸ் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய இருவரையும் கண்டுபிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, தேசிய போதைப் பொருள் தடுப்பு முகமையான ஏஏடிகே-வின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ, தப்பிச் சென்ற இருவரும் டெங்கில் புஸ்பென் மையத்திற்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் இருந்து வாகனம் ஒன்றைத் திருடி தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருடப்பட்ட அந்த வாகனம் பின்னர், சிலாங்கூர் பெரானாங் பகுதியில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து