Sep 15, 2026
Thisaigal NewsYouTube
5,000 மியான்மர் அகதிகள் கட்டம் கட்டமாக தாயகம் திரும்புகின்றனர்
தற்போதைய செய்திகள்

5,000 மியான்மர் அகதிகள் கட்டம் கட்டமாக தாயகம் திரும்புகின்றனர்

Share:

மலேசியாவில் உள்ள 5,000 மியான்மர் நாட்டினரை தன்னார்வ அடிப்படையில் தாயகத்திற்கு அனுப்பும் திட்டத்தின் முதல் கட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, 1,476 மியான்மர் நாட்டினர் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி தாயகம் அனுப்பப்படவுள்ளனர்.

அவர்கள் மியான்மர் அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள குடிநுழைவு தடுப்பு முகாம்களில் 10,388 மியான்மர் நாட்டினர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் அனைவரும் அகதிகள் எனக் கருத முடியாது என்றும் உள்துறை அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இதனிடையே, குறிப்பாக ரோஹிங்கியா இனத்தைச் சேர்ந்த 4,008 மியான்மர் நாட்டினர் இந்த ஆண்டு அகதிகள் பதிவு ஆவணத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவுள்ளனர்.

முதல் கட்ட திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு மியான்மர் கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் மற்றும் ஒரு மருத்துவக் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது

Related News