Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பாதீர்! பக்காத்தான் ஹராப்பான்-க்கு ஜசெக சட்டமன்ற உறுப்பினர் எச்சரிக்கை

Share:

ஆட்சி அமைப்பதற்காக கூட்டணிக் கட்சிகளை அளவுக்கு அதிகமாக நம்பிய முந்தைய அனுபவங்களில் இருந்து பக்காத்தான் ஹராப்பான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜசெக சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தியுள்ளார்.

கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரான அவர் கூறுகையில், பிற கட்சிகளை அதிகம் சார்ந்திருந்தால் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம் என்றும், தேவைப்படும் நேரத்தில் கூட்டணிக் கட்சிகள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறும் நிலை ஏற்படக்கூடும் என்றும் எச்சரித்தார்.

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் அமினுடின் ஹருனுக்கு பாரிசான் நேஷனல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை விலக்கியதையும், பின்னர் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முதல் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திலிருந்து பெர்சத்து விலகிய “ஷெரட்டன் நகர்வு” சம்பவத்தையும் நினைவுகூர்ந்தார்.

தற்போது மத்திய அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலும் பக்காத்தான் ஹராப்பானும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், சொந்த பலத்தை வலுப்படுத்துவதிலேயே பக்காத்தான் ஹராப்பான் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பிரகாஸ் சம்புநாதன் தெரிவித்தார்.

Related News

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்

மலேசியாவில் கடந்த 7 மாதங்களில் 4,646 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு - துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் தகவல்