Sep 12, 2026
Thisaigal NewsYouTube
தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு
தற்போதைய செய்திகள்

தோட்டத்தில் கிடந்த பழைய இரு மோட்டார் குண்டுகள்! போலீசார் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிப்பு

Share:

கெடா,சிக், கம்போங் தஞ்சோங் சேதார் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் புதைந்திருந்த பழைய இரண்டு மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவை பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன.

தோட்டத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த அதன் உரிமையாளர், முதலில் வெடிகுண்டைப் போன்ற ஒரு பொருளைக் கண்டதும் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார் என சிக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிண்டெண்டன் ஷாம்சூரி சாமான் தெரிவித்தார்.

போலீசாரின் விசாரணையில், அது 60 மில்லிமீட்டர் அளவிலான பழைய மோட்டார் வகை வெடிக்காத குண்டு என தெரியவந்தது.

பின்னர் வெடிகுண்டு அழிப்புப் பிரிவினர் மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி நடத்திய சோதனையில், அருகிலேயே மேலும் 81 மில்லிமீட்டர் மோட்டார் குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இரண்டு குண்டுகளும் நேற்று பிற்பகல் இரண்டு கட்டங்களாக பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கையின்போது எந்த அசம்பாவிதமோ, சொத்து சேதமோ ஏற்படவில்லை.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி