Sep 6, 2026
Thisaigal NewsYouTube
நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு
தற்போதைய செய்திகள்

நேபாள பெருவெள்ளம்: 55 மலேசியர்களின் நிலை என்ன? தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு

Share:

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தைத் தொடர்ந்து 55 மலேசியர்களை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்துள்ளார். எனினும், இந்த எண்ணிக்கை நேபாள அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த தகவல் பயண முகவர்களிடமிருந்து கிடைத்ததாகவும், காட்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம் பெயர்ப் பட்டியலைத் திரட்டி சரிபார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவர்களைத் தொடர்புகொள்ள முயன்றும் பதில் கிடைக்காததால், காணாமல் போனோர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நேபாள பாதுகாப்புப் படையினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் முகமட் ஹசான் கூறினார்.

வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு, பாலங்கள் அழிந்துள்ளதால் மீட்புப் பணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து