Oct 16, 2026
Thisaigal NewsYouTube

விபச்சாரம் நடத்தி வந்ததாக தங்கும் விடுதி பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
விபச்சாரம் நடத்தி வந்ததாக தங்கும் விடுதி பராமரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

ஜார்ஜ்டவுன், நவ. 22-


இரண்டு தாய்லாந்துப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் வருமானம் பெற்று வந்ததாக பினாங்கில் ஹோம் ஸ்டே இல்லத்தை நிர்வகித்து வந்த அதன் பராமரிப்பாளர் ஒருவர், ஜார்ஜ் டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
30 வயது அலெக்ஸ் லோ குவான் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் இர்வான் சுவாய்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

38 வயது மதிக்கத்தக்க இரண்டு தாய்லாந்துப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி, அதன் மூலம் பெரும் பணத்தை குதித்து வந்ததாக அந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அவர் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி பினாங்கு, தீமோர் லாவுட் மாவட்டத்தில் தாமான் ஜெலுத்தோங்கில் உள்ள ஒரு ஹோம் ஸ்டே இல்லத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →