கோலாலம்பூர், நவம்பர்.24-
மலேசியாவில் இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணி நிலவரப்படி, எட்டு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 750 பேராக உயர்ந்துள்ளது.
இவற்றில் கிளந்தான் மாநிலம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8,231 பேர், 33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.
அதே வேளையில் , பேராக் மாநிலத்தில் 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மஞ்சோங், லாருட் உள்ளிட்ட 16 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் திரங்கானுவில் 360 பேரும், கெடாவில் 337 பேரும், பெர்லிசில் 268 பேரும் மற்றும் பினாங்கில் 237 பேரும் பாதிக்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், சிலாங்கூரில் 34 பேரும், சரவாக்கில் 44 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில், பொதுமக்கள் விழிப்புடன் நடந்து கொண்டு, பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








