கிள்ளான், செப்டம்பர்.29-
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கர்ப்பிணியான தனது காதலியைத் தீயிட்டு, கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மாணவர் ஒருவர், அந்த குற்றத்தை ஒப்புக் கொள்வதாக கிள்ளான் உயர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
22 வயது முகமட் ஃபக்ருல் ஐமான் சஜாலி என்ற அந்த மாணவர், குற்றத்தை ஒப்புக் கொள்வது மூலம் எதிர்கொள்ளவிருக்கும் தண்டனையின் தன்மை குறித்து விளக்கப்பட்ட போதிலும் அந்த மாணவர், குற்றத்தை ஒப்புக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் என்று அவரின் வழக்கறிஞர் முகமட் நோர் தம்ரின் தெரிவித்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி காலை 8 மணியளவில் சிலாங்கூர், சுங்கை பெசார், ஜாலான் சுங்கை லீமாவில் தனது காதலியான 21 வயது நுர் அனிசா அப்துல் வாஹா என்பவரைத் தீயிட்டுக் கொன்றதாக அந்த மாணவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த மாணவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.








