கோல சிலாங்கூர், ஆகஸ்ட்.17-
நேற்று பிற்பகல் கோல சிலாங்கூர், ஜாலான் பந்தாய், பேசிசிர் பந்தாய் பாரிட் 3 கடற்கரையில், அடையாளம் தெரியாத இந்தோனேசிய ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆடவர் முழு உடையுடன் இருந்ததாகவும், அவரது உடலில் இந்தோனேசிய அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டதாகவும் கோல சிலாங்கூர் மாவட்டக் காவல் துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸாஹாருடின் தஜுடின் தெரிவித்தார்.
முதற் கட்ட விசாரணையில், மரணத்தில் எந்தவிதமான குற்றச் செயல்களும் இல்லை எனத் தெரிய வந்தது. பிரேதப் பரிசோதனையில் அவர் நீரில் மூழ்கி இறந்ததாக உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.








