Oct 1, 2026
Thisaigal NewsYouTube

ரோஸ்மா விவகாரத்தில் சட்ட அம்சங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரோஸ்மா விவகாரத்தில் சட்ட அம்சங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது

லங்காவி, டிசம்பர்.12-

சட்டவிரோதப் பண மாற்றம் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோருக்கு எதிரான வழக்கில் உயநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்டுள்ள மேல்முறையீட்டை மீட்டுக் கொள்வது என சட்டத்துறை அலுவலகம், சட்ட அம்சங்களுக்கு ஏற்ப முடிவெடுத்து இருப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

எந்தவோர் அரசியல் நலன் சார்ந்த தலையீடுகளின்றி சட்ட அம்சங்களை மையக் கருத்தாகக் கொண்டு, ரோஸ்மாவிற்கு எதிரான மேல்முறையீட்டை மீட்டுக் கொள்வதென சட்டத்துறை அலுவலகம் முடிவு எடுத்துள்ளதாக பிரதமர் விளக்கினார்.

இன்று லங்காவி, குவாவில் உள்ள நூர் அல்-டிடாயா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றியப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →