May 21, 2026
Thisaigal NewsYouTube
குளியல் அறையில் பெண்ணின் சடலம், ஆடவருக்கு 7 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

குளியல் அறையில் பெண்ணின் சடலம், ஆடவருக்கு 7 நாள் தடுப்புக்காவல்

Share:

கிள்ளான், கம்போங் பென்டாமார் – ரில் உள்ள ஒரு வாடகை வீட்டு குளியல் அறையில் ஒரு பெண்ணின் சடலம், சிமிந்திக்குள் சுமார் ஒரு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஓர் ஆடவர், விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு, கிள்ளான் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 53 வயதுடைய அந்த அந்த சந்தேகப் பேர்வழி, விசாரணைக்கு ஏதுவாக தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு இன்று காலை 9.47 மணிக்கு கிள்ளான் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

அந்த நபரை வரும் டிசம்பர் 11 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்த படுகொலை தொடர்பாக மேலும் இரண்டு இரண்டு நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அந்நிய நாட்டவர்களான ரஞிட் சிங் மற்றும் மன்டீப் சிங் ஆகிய இருவரை கைது செய்யும் நடவடிக்கையை தற்போது போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட வீட்டில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் இவ்விருவரும் வாடகைக்கு இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Related News