ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளின் கழுத்தை மிதித்து கொன்ற குற்றத்திற்காக தந்தை ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது. 41 வயது முகமது அப்துல்லா முகமது என்ற அந்த நபர், தனக்கு எதிரான கொலை குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்கள் இருப்பதை நிரூபிக்கத் தவறியத்தைத் தொடர்ந்து அவருக்கு தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் இராணுவ வீரரான அப்துல்லா முகமது, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட்டில் உள்ள தனது வீட்டில் நூர் ஐனா நபிஹா என்ற தமது ஒன்பது வயது மகளை சித்ரவதை செய்து கொன்றதாக அந்நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் சம்பந்தப்பட்ட நபர் மறுக்கிறாரே தவிர அவை குறித்து விளக்கம் அளிக்க தவறிவிட்டார் என்று நீதிபதி ரோஹானி இஸ்மாயில் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


