Oct 2, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூரில் அதிரடிச் சோதனை: 92 வெளிநாட்டவர்கள் கைது!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூரில் அதிரடிச் சோதனை: 92 வெளிநாட்டவர்கள் கைது!

ஜோகூர் பாரு, நவம்பர்.30-

ஜோகூர், தாமான் தம்போய் இண்டா பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், பல்வேறு துறைகளில் பணிபுரிந்த 92 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் அறிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் தையல் கடைகள், அழகு நிலையங்கள், உணவங்கள் உட்படப் பல வணிக வளாகங்களில் ஒரே நேரத்தில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் 19 இந்திய ஆண்கள், 19 மியான்மார் ஆண்கள், 4 இந்தியப் பெண்கள் உட்படப் பலர் அடங்குவர். இவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காகச் செத்தியா டுரோப்பிக்காவில் உள்ள குடிநுழைவுத் தடுப்புக் காவல் மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஜோகூரில் அதிரடிச் சோதனை: 92 வெளிநாட்டவர்கள் கைது! | Thisaigal News