இன்று ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் காலையில் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையுடன் பெருநாளை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுமார் பத்தாயிரம் பேருடன் இணைந்து புத்ராஜெயா, மஸ்ஜிட் புத்ராவில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டார். பிரதமருடன் அவரின் துணைவியார் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் காலை 8.20 மணியளவில் பள்ளிவாசலை வந்தடைந்தார். மலாய் பாரம்பரிய ஆடையில் காணப்பட்ட பிரதமர் தம்பதியர் மக்களுடன் மக்களாக இணைந்து ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தியாகத்தின் பெருமைகளை குறிக்கும் வகையில் "தியாகத்தின் மதிப்பு: என்ற தலைப்பில் சிறப்பு உரையும் பள்ளி வாசலில் இடம் பெற்றது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


