ஷா ஆலாம், அக்டோபர்.14-
முறையான லைசென்ஸின்றி திருமண தன்முனைப்புப் பயிற்சி நடத்தியதாக ஒரு தம்பதியர், ஷா ஆலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
38 வயது ஷாஸிஃப் ஒஸ்மான் மற்றும் அவரின் மனைவி 37 வயது முனிரா ஹிஷாம்ஷா என்ற அந்த தம்பதியர் 1998 ஆம் ஆண்டு திருமண நல்லுரைச் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இரு வெவ்வேறு நீதிமனறங்களில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தம்பதியர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
இவ்விருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஷா ஆலாம், செக்ஷன் 15 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








