Mar 15, 2026
Thisaigal NewsYouTube
போதையில் வண்டி ஓட்டிய மூவர் கைது
தற்போதைய செய்திகள்

போதையில் வண்டி ஓட்டிய மூவர் கைது

Share:

அம்பாங், ஜன - 7,

அம்பாங், ஜாலான் பண்டான் உத்தாமா மற்றும் ஜாலான் பண்டான் இண்டா ஆகிய சாலைகளில் மது போதையில் காரை செலுத்திய 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட Operasi Mabuk சோதனையில் அவர்கள் பிடிபட்டனர் என அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் Asisten Komisioner முகமட் அஸாம் இஸ்மாயில் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்கள் 50 முதல் 95 வயது வரையிலானவர்கள் எனவும் சுவாசப் பரிசோதனையில், அவர்கள் மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது எனவும் முகமட் அஸாம் இஸ்மாயில் குறிப்பிட்டார்.

Related News