கோலாலம்பூர், செப்டம்பர்.03-
அரசாங்கத்திற்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவேற்றம் செய்தற்காக தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கி இருந்த வலைப்பதிவாளர் பாபாகோமோ Papagomo என்ற வான் முகமட் அஸ்ரியை இன்று விடுதலை செய்து இருக்கும் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற முடிவை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம், மேல்முறையீடு செய்யவிருக்கிறது.
மூன்று ஆண்டு சிறை அல்ல 5 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்தின் கீழ் பாபாகோமோ விடுதலையை எதிர்த்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








