தங்காக், நவம்பர்.26-
பல்கலைக்கழக மாணவர் ஒருவர் சென்ற மோட்டார் சைக்கிளை லோரி ஒன்று மோதித் தள்ளியதில் அந்த மாணவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.
இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 10.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 156.2 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர், தங்காக்கிற்கு அருகில் நிகழ்ந்தது.
20 வயதுடைய பல்கலைக்கழக மாணவரின் மோட்டார் சைக்கிளை லோரி மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த அந்த மாணவர், அவசரத்தடத்தில் கீழே விழுந்து பலத்த காயங்களுக்கு ஆளாகி மரணமுற்றதாக தங்காக் மாவட்ட போலீஸ் தலைவர் ரொஸ்லான் முகமட் தையிப் தெரிவித்தார்.








