Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் பலாத்காரம் புரிந்தவருக்கு 3 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

பாலியல் பலாத்காரம் புரிந்தவருக்கு 3 ஆண்டு சிறை

Share:

கோலாலம்பூர், ஜூலை 22-

இளம் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக கட்டுமானத் தொழிலாளரி ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று மூன்று ஆண்டு சிறை மற்றும் ஓர் பிரம்படித் தண்டனை விதித்தது.

40 வயது G. மோகனதாஸ் என்ற அந்த கட்டுமானத் தொழிலாளி, கடந்த ஜுலை 15 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் கோலாலம்பூர், செராஸ், PPR அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமனறத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிரான குற்றத்தை அந்நபர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த 3 ஆண்டு சிறை, அவர் பிடிபட்ட தினமாக ஜுலை 15 ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக நீதிபதி முகமது கஃப்லி சே அலிகுறிப்பிட்டார்.

அந்த அடுக்குமாடி வீட்டின் 17 ஆவது மாடியில் உள்ள வீட்டிற்கு செல்வதற்காக அப்பெண், லிப்டைப் பயன்படுத்திய போது சம்பந்தப்பட்ட நபர் ஆபாச சேட்டையைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

நான் தான் சிவாஜி தி பாஸ்!": சிறைவாசம், சித்திரவதைகளைக் கடந்து ஜெயித்த கதையைக் கூறி உருகிய பிரதமர் அன்வார்

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை:  ஆடவர் மீது குற்றச்சாட்டு

போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் கார் ஓட்டி இரு பெண்கள் கொலை: ஆடவர் மீது குற்றச்சாட்டு

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

கூலிமில் 129 சட்டவிரோத குடியேறிகள் கைது - குடிநுழைவுத்துறை அதிரடி

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

வேப் சிகரெட் விற்பனையைத் தடை செய்ய சிஏபி கோரிக்கை

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

3,43,000-க்கும் மேற்பட்ட டிவெட் வேலை வாய்ப்புகள்: தொழில்துறையில் அதிகரித்த மவுசு; சராசரி சம்பளம் 3,658 ரிங்கிட்

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு

கூலாயில் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ரிம 343,000 நிதி ஒதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர் திமயா நி சிங் அறிவிப்பு