Jul 18, 2026
Thisaigal NewsYouTube
ஜிஞ்சாங் உத்தாரா அருகே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 13 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜிஞ்சாங் உத்தாரா அருகே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 13 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜிஞ்சாங் உத்தாரா பகுதியில் நேற்று, கடன் வசூல் தொடர்பான தகராறு, வன்முறையாக மாறிய சம்பவத்தில், 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வணிக வளாகம் ஒன்றின் அருகே நிகழ்ந்த இக்கலவரம் குறித்து பொதுமக்களில் ஒருவர் 999 அவசர எண் மூலம் தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செந்துல் மாவட்ட போலீஸ் தலைவர்பஸ்ரி சாகோனி தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், கடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கருத்து வேறுபாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.

அந்த வாய் தகராறு பின்னர் வன்முறை மோதலாக மாறியதில் ஒருவர் காயமடைந்ததாகவும் பஸ்ரி சாகோனி குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News