Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸில் பயங்கர தீ விபத்து – 8 வீடுகள், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசம்!
தற்போதைய செய்திகள்

பெர்லிஸில் பயங்கர தீ விபத்து – 8 வீடுகள், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசம்!

Share:

பெர்லிஸ் மாநிலம்,கோலா பெர்லிஸ் அருகே உள்ள கம்பங் செபெராங் அலோர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகளும் ஒரு மோட்டார் சைக்கிளும் முற்றிலும் எரிந்து நாசமாகின.

அதிகாலை 3.38 மணியளவில் அவசர அழைப்பு பெறப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக பெர்லிஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் முகமது ஹாமிசி வான் முகமது ஜின் தெரிவித்துள்ளார்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கங்கார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய வீரர்களுடன், சிம்பாங் எம்பாட், பாடாங் பெசார், கோலா பெர்லிஸ் மற்றும் பாவ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தன்னார்வ தீயணைப்பு படையினரும் இணைந்து போராடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வீரர்களின் விரைவான நடவடிக்கையால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்