Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுகிறது பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்
தற்போதைய செய்திகள்

பொதுமக்களின் ஒத்துழைப்பை நாடுகிறது பெட்ரோலிய வணிகர்கள் சங்கம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.22-

பெட்ரோல் ரோன் 95 எரிபொருள் மானிய நடைமுறை அமலாக்கத்தைச் சீராக்குவதில் ஏற்படக்கூடிய தொடக்கக் காலச் சவால்களை கையாளுவதில் தங்கள் உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்களை மலேசிய பெட்ரோலிய வர்த்தகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மானியத்திற்குரிய பெட்ரோல் ரோன்95 எரிபொருளை விற்பனை செய்தவதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அவ்வகை பெட்ரோலை வாங்குவதற்கு தகுதியானவரா என்பதைச் சரிபார்ப்பதற்கு ஆவணங்கள் கோரப்படும். இது சிக்கலான நடைமுறை என்றாலும் தொடக்கக் காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குவார்களேயானால் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தைச் செம்மையுற அமல்படுத்த முடியும் என்று அந்தச் சங்கம் கூறுகிறது.

இதில் வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிலையங்களுக்கம் புரிதல் அவசியமாகும் என்று அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related News