Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய ஊடக மன்றம் சுதந்திரமாகத் திறம்பட வழிநடத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

மலேசிய ஊடக மன்றம் சுதந்திரமாகத் திறம்பட வழிநடத்தப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா, நவம்பர்.08-

MMM எனப்படும் மலேசிய ஊடக மன்றம் தோற்றுவிக்கப்பட்டு இருப்பது, ஊடகத் துறையின் நம்பகத்தன்மை, பத்திரிகை நெறிமுறைகள், ஊடகப் பணியாளர்களின் தொழில்முறை மற்றும் அவர்களின் நலனைப் பாதுகாப்பதில் நாட்டின் ஊடகத் துறை சீர்திருத்தத்தின் அடைவு நிலையைப் பிரதிபலிக்கிறது என்று தொடர்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், ஊடகச் சங்கங்கள், பொதுமக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய ஊடக மன்றத்தின் வாரிய உறுப்பினர்கள் கொண்டுள்ள பன்முக நிபுணத்துவம் மற்றும் அவர்களின் அனுபவம், ஆக்கப்பூர்வமான முறையில் பொறுப்புடன் அந்த மன்றத்தை த்திறம்பட வழிநடத்த உதவும் என்று தொடர்புத்துறை அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மலேசிய ஊடக மன்றம், பத்திரிகை நடைமுறையின் தரங்களை நிர்ணயிப்பதிலும், ஊடகங்கள் தொடர்பான பொது புகார்களை முழு வெளிப்படைத்தன்மையுடன் கையாள்வதிலும், ஊடக நெறிமுறை கொள்கைகளுக்கு இணங்க, சுதந்திரமாகவும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என்று தொடர்புத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

புதிய உத்வேகத்துடன், அதிகாரப்பூர்வ ஊடக நிலப்பரப்பை வளப்படுத்தவும், பொதுமக்களின் நம்பிக்கையை ஊடகங்கள் அதிகரிக்கச் செய்யவும் மலேசிய ஊடக மன்றத்தின் பிரதான பங்களிப்பை ஆதரிக்க அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

நேற்று தனது முதலாவது ஆண்டுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்துள்ள மலேசிய ஊடக மன்றத்திற்குத் தொடர்புதுறை அமைச்சு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News