கோலாலம்பூர், டிசம்பர்.08-
தனியார் மருத்துவமனைகள் கண்மூடித்தனமாக மருத்துவக் கட்டணம் விதிப்பதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் நடப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாக சுகாதார துணை அமைச்சர் டத்தோ லுகானிஸ்மான் அவாங் சௌனி தெரிவித்துள்ளார்.
1998 ஆம்ஆண்டு தனியார் மருத்துவமனைச் சட்டத்தில் இந்தத் திருத்தம் செய்யப்படும் என்று மேலவையில் இன்று கேள்வி நேரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரச் சேவைக்கான மருத்துவ மற்றும் பயன்பாட்டு சேவைக்கான கூடுதல் செலவினம், பண வீக்கத்திற்கு வித்திடப்படுவதால் இத்தகையச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படுவது மிக முக்கியமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
இதில் மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா மற்றும் காப்புறுதித்துறை வாயிலாக நிதி அமைச்சின் பங்களிப்பும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.








