அலோர் காஜா, நவம்பர்.05-
கடந்த சனிக்கிழமை சுங்கை கோலோக்கில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பிடிபட்டுள்ள சந்தேகப் பேர்வழியின் குடியுரிமை அந்தஸ்தைச் சரிபார்க்கும்படி தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்படுவர் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பிடிபட்டுள்ள 30 வயது மதிக்கத்தக்க நபர், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளதாக தமக்கு விளக்கம் அளித்த கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யுசோஃப் மாமாட் தெரிவித்துள்ளார் என்று சைஃபுடின் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி மலேசியர் ஒருவர், இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருக்க முடியாது. அப்படியிருந்தால், ஒரு குடியுரிமை தகுதியை மட்டும் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவர் என்று சைஃபுடின் தெரிவித்துள்ளார்.








