Jul 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய துணை போலீஸ் படைத் தலைவராக இப்ராஹிம் டாருஸ் நியமனம்
தற்போதைய செய்திகள்

மலேசிய துணை போலீஸ் படைத் தலைவராக இப்ராஹிம் டாருஸ் நியமனம்

Share:

கோலாலம்பூர், ஜூலை.26-

புக்கிட் அமான் சிறப்புப் பிரிவு இயக்குநர் இப்ராஹிம் டாருஸ், மலேசியாவின் இடைக்கால துணை போலீஸ் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை ஓய்வு பெறும் அயோப் கான் பிட்சைக்கு பதிலாக அவர் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

இதற்கான பதவியேற்பு விழா போலீஸ் பயிற்சி மையத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் இஸ்மாயில் கலந்து கொண்டு, புதிய இடைக்கால துணை போலீஸ் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

இப்ராஹிம் டாருஸ், கடந்த 2025-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், புக்கிட் அமான் E1 சிறப்புப் பிரிவு துணை இயக்குநராக நியமிக்கப்பட்டு, பின்னர் சிறப்புப் பிரிவு இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.

அதற்கு முன்பு அவர் சரவாக் மாநில போலீஸ் துணைத் தலைவராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News