4 வருடங்களுக்கு முன்பு, செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியரை கொலைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நைஜீரிய ஆடவர் தூக்கில் இருந்து தப்பினார்.
40 வயதுடைய அந்த நைஜீரிய ஆடவருக்கு எதிராக விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்குப் பதிலாக அவருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமை ஏற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ வசீர் அலாம் மைடின் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதே வேளையில் அந்நபருக்கு 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அலோவொன்லே ஒலுவஜுவோன் கில்பெர்ட் என்ற அந்த நைஜீரியருடன் தங்கிருந்ததாக கூறப்படும் அந்த தலைமை தாதியரான சித்தி கைரினா, கடந்த 2019 ஆண்டு மே 15 ஆம் தேதி பிற்பகல் 2:30 மணியளவில் சைபர்ஜெயா, தேர்ட் எவெனு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கொலைச் செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை கொலைச் செய்ததாக சம்பந்தப்பட்ட அந்நிய ஆடவர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


