Sep 27, 2026
Thisaigal NewsYouTube
ஊடகவியலாளர்களுக்கு 300 லிட்டர் பெட்ரோல் மானியம்: அமைச்சரவையில் பரிந்துரைக்கிறார் பாஹ்மி பாட்சில்
தற்போதைய செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு 300 லிட்டர் பெட்ரோல் மானியம்: அமைச்சரவையில் பரிந்துரைக்கிறார் பாஹ்மி பாட்சில்

Share:

பதிவுபெற்ற ஊடகவியலாளர்களுக்கு மாதந்தோறும் 300 லிட்டர் 'பூடி95' பெட்ரோல் மானிய ஒதுக்கீட்டைத் தொடர்ந்து வழங்குவது குறித்த பரிந்துரையை, அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள தேசிய பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகத் தொடர்புத் துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

தற்போது இந்த ஒதுக்கீடு தற்காலிகமாக 200 லிட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. இது களத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பதாக ஊடக மன்றங்களின் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை ஏற்று அமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மேலும், அடுத்த புதன்கிழமை முதல் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிந்தைய வாராந்திரச் செய்தியாளர் சந்திப்புகள் 'ஹைபிரிட்' முறையில் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார். இதன் மூலம் புத்ராஜெயாவிற்கு நேரில் வர முடியாத செய்தியாளர்களும் இணையம் வாயிலாகத் தங்களின் கேள்விகளை எழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

சபாவில் நிலநடுக்கத்தைக் கண்காணிக்க 28 நில அதிர்வு நிலையங்கள் - மெட்மலேசியா அறிவிப்பு

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நஜிப்புக்கு ஆதரவாக இதுவரை 9.25 மில்லியன் ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது - ஸாஹிட் ஹாமிடி தகவல்

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

கோலாலம்பூர் கேளிக்கை மையத்தில் அதிரடிச் சோதனை: ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான நடன நிகழ்ச்சிகளை நடத்திய 4 பேர் கைது

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

நேபாள வெள்ளத்தில் மாயமான 55 மலேசியர்களின் கதி என்ன? - வெளியுறவு அமைச்சிடம் குடும்பத்தினர் முறையீடு

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

கலும்பாங்–கோலா குபு பாரு சிக்னல் கோளாறு: கேடிஎம் சேவைகளில் தாமதம்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்

யுஐடிஎம் ஹோல்டிங்ஸ்: முதலில் விசாரணை, பின்னர் நடவடிக்கை – அன்வார்